சென்னையில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

public

சென்னையில் கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர், முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. ஒருசில இடங்களில் முகக்கவசத்தை சரியாக அணிவதில்லை என்ற புகாரும் வருகிறது. இந்நிலையில்,சென்னையில் முகக்கவசம் அணிவது அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் ஐசிஎம்ஆர்-என்ஐஇ ஆகியவை சென்னையில் மக்கள் முகக்கவசத்தை சரியாக அணிகிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்த ஆய்வில்,குடிசைப்பகுதியில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை 21 சதவிகிதத்திலிருந்து 41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மற்ற பகுதிகளில் இந்த எண்ணிக்கை 21லிருந்து 47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

முழுவதும் அடைக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் 24 சதவிகித பேரும், குடிசை அல்லாத இதர அடைக்கப்பட்ட பகுதிகளில் 33 சதவிகித பேரும் முகக்கவசம் அணிகின்றனர்.

அதுபோன்று குடிசை பகுதியில் வீட்டில் இருக்கும்போது 24 சதவிகிதத்தினரும். மற்றப்பகுதியில் 33 சதவிகிதத்தினரும் முகக்கவசம் அணியும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அதேசமயம், குடிசைப்பகுதிகளில் 38 சதவிகிதத்தினரும், மற்ற குடியிருப்பு பகுதிகளில் 25 சதவிகிதத்தினரும் முகக்கவசம் அணிவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர், நாட்டில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், முகக்கவசம் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 74 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *