�ஜெயலலிதாவை விமர்சித்த அதிமுக வேட்பாளர் மகன் வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு

public

அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதிக்கு அதிமுக சார்பில், முதலில் குமரி மாவட்ட மகளிரணி செயலாளர் டாரதி சாம்சன் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் மாற்றப்பட்டு மீண்டும் நாஞ்சில் முருகேசன் அதிமுக தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நாஞ்சில் முருகேசனின் மகன் சிவராம் தனது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துகொண்டபோது அவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைப் பற்றி விமர்சிதுள்ள வாட்ஸ் அப் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மது விருந்து நடக்கும்போது பேச்சு அரசியல் நோக்கி நகர்கிறது அப்போது சிவராம், திடீரென “ஆத்திரம் அடைந்து அம்மாவை மிஞ்சின ஆளு இந்தியாவிலேயே கிடையாதா? பார்த்திருவோம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர சான்ஸே இல்லை. கட்சி பணத்தை வச்சு எங்க அப்பா எம்எல்ஏ ஆகல. சொந்த பணைத்தைக் கொடுத்துதான் எம்எல்ஏ ஆகியிருக்கோம். ஜெயலலிதா மீண்டும் முதல்வரா வரலனா நீங்க தமிழ்நாட்டுல இருக்க மாட்டீங்களா?” என்று கேட்கிறார். அப்போது ஒரு நண்பர், வீடியோ வாட்ஸ் அப்பில் வந்துவிடும் என்று சொல்கிறார். அதற்கு அவர், “வாட்ஸ் அப்பில் என்ன ஸ்கைப்பிலேயே போடு. ஜெயலலிதாகிட்டயே கொண்டு காட்டு. என்ன செய்துருவாங்க? கழுத்தையா அறுத்துருவாங்க பாத்துக்கலாம்.”என்று கூறுகிறார்.

இந்த 1 நிமிடம் 30 நொடிகள் நேரம் கொண்ட வாட்ஸ் அப் வீடியோவில் அதிமுக வேட்பாளர் மகனே ஜெயலலிதாவை விமர்சிப்பதால் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *