முன்னிலை பெறமுடியாமல் தவிக்கும் இந்திய அணி வீரர்கள்!

public

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, பேட்ஸ்மேன் தர வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் (875 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (871 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி (852 புள்ளிகள்) 3வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா 12வது இடத்திலும், டோனி 13வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சு தர வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்களில் ஒரு பவுலர்கூட முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. அக்‌சர் பட்டேல் 11வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 10வது இடத்தில் உள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *