?போதைக்கு எதிராக ராகுல்!

public

பஞ்சாப் மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. 2 முறை ஆட்சியை தக்கவைத்த சிரோன்மணி அகாலிதளம்மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளதாகவும், நிச்சயம் சிரோன்மணி அகாலிதளம் – பாஜக கூட்டணிக்கு பஞ்சாப் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என்றும் அங்கிருக்கும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்காக இப்போதே ஒவ்வொரு கட்சிகளும் தீவிர களப்பணியாற்றத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி பஞ்சாப் களத்தை தீவிரமாக பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பொதுக்கூட்டத்தில் காங். துணைத் தலைவர் ராகுல் பேசுகையில், ‘பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. இந்தத் தொழில் மட்டுமே இங்கு பெருகியுள்ளது. இதைத் தடைசெய்ய அரசுகள் மறுத்துவருகின்றன. இந்த விற்பனைமூலம் அகாலிதளம் பயன்பெற்று வருகிறது. போதை என்றாலே பஞ்சாப் என்றுதான் அர்த்தம். பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் பலர் என்னைச் சந்தித்து இந்த விஷயத்தைக் கூறினர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் இல்லாமல் இருந்தது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, போதை ஒழிப்பில் முக்கிய பணியாற்றுபவர்களாக இருப்போம். புதிய சட்டதிட்டங்கள் கொண்டுவருவோம். சில ஆண்டுகளுக்கு முன்னதாக, நான் பஞ்சாப் வந்தபோது போதைப்பொருள் குறித்து எச்சரித்தேன். ஆனால் அப்போது என்னைக் கேலிசெய்தனர். இன்று, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டுமானால் போதையை ஒழிக்க வேண்டும்’ எனப் பேசினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *