பண்டிகைக் கால விடுமுறையில் மக்களின் விருப்பம்!

public

இந்த பண்டிகைக் கால விடுமுறையில் 73 சதவிகித இந்தியர்கள் சலிப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

தீபாவளி, தசரா ஆகியவை முக்கியமான இரு பெரும் பண்டிகைகள் இந்த பண்டிகைக் கால விடுமுறையை மகிழ்ச்சியோடு மக்கள் எவ்வாறு கொண்டாட விரும்புகின்றனர் என்பது குறித்து மக்களின் மனநிலையை அறிந்திட யாத்ரா நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த விடுமுறைக் காலத்தை 73 சதவிகிதம் பேர் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடவே விரும்புகின்றனர். பயணம் மேற்கொள்பவர்களில் 40 சதவிகிதம் பேர் 1 முதல் 3 மாதங்களுக்கு முன்பாகவே பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டனர்.

42 சதவிகிதம் பேர் 3-4 நட்சத்திர விடுதகளிலும், 25 சதவிகிதம் பேர் பட்ஜெட் விடுதிகளிலும் விடுமுறையை கழிக்க விரும்புகின்றனர். ஜி.எஸ்.டி.யின் தாக்கத்தால் ஆடம்பர விடுதிகளுக்கு செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதை பரவலாக உணர முடிந்தது. 22 சதவிகிதம் பேர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறைக் காலத்தில் அதிகம் பயணிக்க விரும்பும் சுற்றுலாத் தளமாக கேரளா உள்ளது. கோவா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய இடங்களும் மக்களின் தேர்வாக உள்ளது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *