தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்!

public

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். இதனால், அவருடைய உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் அக்ரகாரசாமக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது தாயார் துளசியம்மாள். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த மே 6 –ஆம் தேதி இரவு துடியலூரில் உள்ள லட்சுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் என 12 மணிநேரத்தில் ரூ.32 ஆயிரம் வரை மருத்துவ கட்டணமாக செலுத்தியுள்ளனர். மேலும், கடந்த 2 நாட்களும் தனியாக ரூ.10 ஆயிரம் சிறப்பு மருத்துவக் கட்டணமாக செலுத்த வேஎண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவர்களிடம் பணம் செலுத்த வசதி இல்லாததால், தாங்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதாக துளசியம்மாளின் மகன் தெரிவித்துள்ளார். மே 8-ஆம் தேதி காலைத் தனது தாயைக் கொண்டு செல்ல வாடகைக் காரை அழைத்து வருவதற்குள் மருத்தவமனை நிர்வாகம் அவருடைய தாயை சடலமாக ஒப்படைத்துள்ளது. இது குறித்து பழினிசாமி மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது லிப்டில் கொண்டு செல்லும்போது இறந்திருக்கலாம் என்று மருத்துவ நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த துளசியம்மாளின் மகன் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் துளசியம்மாவின் உடலை வாங்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார் இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சிகிச்சைக்கு வாங்கிய தொகையை மருத்துவமனை நிர்வாகம் திருப்பி கொடுத்ததையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு துளசியம்மாளின் உடலை வாங்கிச் சென்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *