ஜெயலலிதா படத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு: முதல்வர்!

public

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவ படத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

டெல்லியில் மே 24-ஆம் தேதி பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,”தமிழகத்திற்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தேன். அதில் தமிழக மாணவர்கள் நலன் கருதி தமிழ் நாட்டில் இயங்குகிற அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் அரசு கொட்ட இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்திற்கு புதிய எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப்புறுதி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். அடஹ்ற்கான உத்தரவை மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் காப்பிட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், காவிரி படுகை பாசனத்தை மேம்படுத்த ரூ 14,500- கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டத்தை தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒரு திட்டத்தை பரிந்துரைத்திருக்கிறது, அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும். கேரளா அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி வருகிறது அதை தடுக்க கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். இப்பிரச்னையை தடுக்க, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும்.

பம்பா, அச்சன் கோவில், வைப்பாறு முதலிய அணைகளிலிருந்து உபரியாக கடலுக்குச் செல்கின்ற நீரை தமிழகத்திற்கு வழங்கவும், அத்திட்டத்தின் மூலம் கேரள மாநிலம் மின்சாரம் பெறவும் கேரள அரசுக்கு, மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும். இத்திட்டம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும். தமிழ்நாட்டில் பண்டைய நீர் மேலாண்மை திட்டமான குடிமாமரத்து திட்டத்தின் மூலம் ரூ 100-கோடி மதிப்பீட்டில் மக்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் ஏறி,குளம் தூர்வாரி புனரமைத்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை போல் குடிமாரமத்து திட்டத்தையும் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதற்கு இந்தாண்டு ரூ 300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து 2017-2018-ஆம் ஆண்டில் ரூ 5௦௦ கோடி நிதி உதவி மானியமாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் மத்திய அரசு திட்டங்களுக்கு விடுவிக்க வேண்டிய நிலுவைத் தொகையான 17,௦௦௦ கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள 135 படகுகள் மற்றும் 11 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மீன்வளம் பரவலாக்குதல் சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ 2௦௦ கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகம் சார்பில் 86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவ படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ளது. படத் திறப்புக்கு பிரதமரை அழைத்துள்ளேன். ஜெயலலிதா அவர்கள் அறிவித்தபடி எம்.ஜி.ஆர்.ன் நூற்றாண்டு விழா, அரசு விழாவாக அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கொண்டாடப்படும். சென்னையில் அதன் இறுதி நிகழ்வு நடைபெரியவுள்ளது அதற்கும் பிரதமரை அழைத்துள்ளேன். குடியரசுத் தலைவரின் தேர்தல் முடிவு குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *