கெஜ்ரிவாலின் மீதான லஞ்சப் புகார்: அன்னா ஹசாரே வேதனை!

public

�கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர், கெஜ்ரிவாலின் மீது லஞ்சப் புகாரைச் சுமத்தியிருப்பதால், அன்னா ஹசாரே கெஜ்ரிவாலின் மீதான தனது நம்பிக்கை உடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லி சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று மே 6ஆம் தேதி சனிக்கிழமை (நேற்று) அதிரடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து கபில் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆம் ஆத்மி தலைவர்கள் சிலருடைய ஊழல்கள் குறித்து மே 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) வெளியிடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் மே 7ஆம் தேதி (நேற்று) செய்தியாளர்களிடம் கபில் மிஸ்ரா கூறுகையில், “கெஜ்ரிவால் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் [லஞ்சம்](http://www.minnambalam.com/k/2017/05/07/1494162306) வாங்கியுள்ளார்”என்று தெரிவித்தார். இதனால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் டெல்லி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து, கெஜ்ரிவாலின் முன்னாள் வழிகாட்டியான அன்னா ஹசாரே வேதனைத் தெரிவித்துள்ளார். டெல்லியில் மே 7ஆம் தேதி (நேற்று) அவர் கூறுகையில், “இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. கெஜ்ரிவால் என் நம்பிக்கையை உடைத்து விட்டார். இந்த விவகாரத்தில் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *