)கிட்ஸ் கார்னர்!

public

என்ன குட்டீஸ்? அறிவியல் சொல்லி அதிரசம் வாங்கினீங்களா? இல்லே, ‘தொல்லை பண்ணாம போடான்’னு அம்மாகிட்ட அடி வாங்குனீங்களா? என்னமோ, எனக்கு ஏதும் பிரச்சினை வராம இருந்தா சரி…

பிரச்சினை என்றதும்தான் ஞாபகம் வருகிறது. ஒருவேளை உங்களுக்கு அதிரசம் கிடைச்சு, அதை உங்க நண்பர்கள் பார்த்து உங்ககிட்ட ஒரு பங்கு கேட்டா, நீங்க குடுப்பீங்கதானே? இல்லைனா சண்டை வருமே! பிரச்சினை வருமே!

அறிவியலை கொஞ்சம் ஒதுக்கி வெச்சிட்டு, நமக்கு நண்பர்களோட பிரச்சினை வராம இருக்க என்ன பண்ணணும் என்கிற வாழ்க்கைப் பாடத்தைக் கத்துக்கலாமா?

நண்பர்களை தேர்ந்தெடுக்கிறதுலதான் உங்க வாழ்க்கையே இருக்கு. “உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்” என்ற பழமொழியை கேட்டிருக்கீங்கள்ல?

நண்பன் படத்துல வர்ற விஜய் அண்ணா மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சா, அது ஒரு வரம்தானே குட்டீஸ்? அப்படி சிறந்த நன்பர்களை தேர்ந்தெடுப்பதற்குச் சில வழிகள் இருக்கு. அது என்னென்னன்னு பார்ப்போமா?

* சிறந்த லட்சியங்களைக்கொண்ட நண்பர்களைத் தேர்ந்தெடுங்க. ஏன்னா, லட்சியம் உள்ளவர்கள் வழிகாட்டிகளா இருப்பாங்க. வழிகாட்டிகள் சிறந்த வழி காட்டுவாங்க!

* பெறுவதற்கு மட்டுமல்ல; கொடுப்பதற்கும் நண்பர்கள்தான். ஒரு நல்ல நண்பன் உங்களுக்கு வேணும்னா, நீங்கள் ஒரு நல்ல நண்பனாக இருக்கணும்.

* எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளாதீர்கள். அன்பைத் தவிர!

* வார்த்தைகளைவிட உணர்ச்சிகள் மூலம் பேசுங்க. வார்த்தைகள்கூட தோத்துப்போகலாம். ஆனா, நாம வெளிப்படுத்துற உண்மையான உணர்ச்சி நம்மைச் சேர்த்துவைக்கும்.

* நம்பிக்கையைக் கொடுங்க. நம்பிக்கை வையுங்க. நம்பிக்கைக்குப் பாத்திரமா நடந்துக்கோங்க!

இந்த விதிகளை கடைப்பிச்சீங்கன்னா, உங்களுக்கு ஊரெல்லாம் ஃப்ரெண்ட்ஸ்தான். உலகமே ஃப்ரெண்ட்ஸ்தான்!

**நரேஷ்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *