`காரை விற்று உதவி செய்த கன்னட நடிகர்!

public

விவசாயிகளுக்கு உதவத் தன் சொகுசு காரினை விற்று நிதியுதவி செய்துள்ளார் கன்னட நடிகர் சுதீப்.

கன்னட நடிகரான சுதீப் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான `நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்தார். கன்னடப் படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த புலி திரைப்படத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி படத்திலும் நடித்தார்.

கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதன் மூலம் கன்னடத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் நபராக மாறியுள்ளார் சுதீப். சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னால் முடிந்த உதவிகளையும் இவர் செய்துவருகிறார்.

ஏற்கனவே கன்னட நடிகர் நடிகைகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த இவர் தற்போது கன்னட விவசாயிகளின் நலன் கருதி தன்னுடைய விலை உயர்ந்த பி.எம்.டபள்யூ காரை விற்று உதவ உள்ளார்.

கர்நாடகாவில் விவசாயிகளின் நலன் கருதி இயங்கும் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கடந்த 14ஆம் தேதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இவர் அங்கே பேசியபோது, “நான் சினிமா துறையில் இருந்தாலும் பெரிய அளவில் என்னிடம் எந்தச் சொத்தும் இல்லை. ஆனாலும் விவசாயிகளின் நலனுக்காக, நான் பயன்படுத்திவரும் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 மாடல் காரை விற்று அதில் வரும் பணத்தைத் தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *