உலகக் கோப்பை: பென் ஸ்டோக்ஸ் எட்டிப் பிடித்த வெற்றி!

public

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (மே 30) இங்கிலாந்தில் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டி என்பதாலும், சொந்த மண்ணில் விளையாடுவதாலும் இங்கிலாந்து மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது முடிவுக்கு ஏற்றாற்போல, ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஜானி பெய்ர்ஸ்டோவ் டக்கவுட் ஆகி வெளியேறினார்.

எனினும், பின்னர் வந்த ஜோ ரூட், ஜேசன் ராயுடன் இணைந்து பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோர்கன் 57 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் லுங்கி ஏங்கிடி 3 விக்கெட்டுகளும், தாஹிர் மற்றும் ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

312 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. விக்கெட் கீப்பர் குயிண்டன் டீகாக் மற்றும் வாண்டர் டூசன் ஆகிய இருவரின் ஆட்டம் அணிக்கு சற்று நம்பிக்கையளிப்பதாக இருந்தது. டீகாக் (68 ரன்) விக்கெட் விழுந்தபிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். வாண்டர் டூசன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 39.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றியை ருசித்தது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், லியாம் பிளங்கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஆல்ரவுண்டராக அசத்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அடில் ரஷித் பந்தில் ஆண்டிலே பிளாவாக்யோ அடித்த பந்தை எல்லைக்கோட்டருகே டைவ் செய்து பிடித்த பென் ஸ்டோக்ஸின் [கேட்ச்](https://www.cricketworldcup.com/video/1230828/cwc19-eng-v-sa-stokes-defies-logic-to-grab-a-stunner-in-the-deep) அனைவராலும் பேசப்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை மேற்கிந்தியத் தீவுகள் எதிர்கொள்கிறது. டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[மத்திய அமைச்சர்: ஓபிஎஸ் மகனுக்கு எடப்பாடி கடும் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/05/30/80)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு இளைஞரணி: ஸ்டாலினுக்கு நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/30/79)

**

.

**

[முதல்வர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/30/18)

**

.

**

[என்ன செய்திருந்தால் ராகுல் வென்றிருப்பார்!?](https://minnambalam.com/k/2019/05/30/23)

**

.

**

[காங்கிரஸ் தலைவராக தலித்?](https://minnambalam.com/k/2019/05/30/53)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *