^இந்த வார ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன?

public

தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை 5 நேரடித் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆகின. 1 நெடுநல் வாடை, 2. ஜுலை காற்றில், 3அகவன் 4. இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், 5.கில்லி பம்பரம் கோலி.

இவற்றில் விநியோகஸ்தர்கள் எம்.ஜி, அட்வான்ஸ் முறையில் வியாபாரம் செய்த படம் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மட்டுமே. மற்ற நான்கு படங்களும் தயாரிப்பாளரால் நேரடியாக ரிலீஸ் ஆகின.

தமிழ்நாடு முழுவதும் நெடுநல்வாடை படத்திற்கு மிக குறைந்தபட்ச ஓபனிங் இருந்தது. இப்படம் வெளிவருவதற்கு முன்பாக ஊடகங்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பற்றிய விமர்சனத்தை ஊடகங்கள் பாரபட்சமின்றி வெளியிட்டதால் பொது வெளியில் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற மனோ நிலையை உருவாகியது. அதன் காரணமாக நெடுநல்வாடை படம் திரையிட்ட அரங்குகளில் 20% வரை டிக்கட்டுகள் விற்பனையானது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹரிஸ் கல்யாண் நடித்துள்ள இரண்டாவது படம் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும். முதல் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. இப்படம் விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் சுமார் 1.50 கோடி ரூபாய் வரை விநியோகஸ்தர்கள் மூலம் கிடைத்திருக்கிறது. நகரத்தை தவிர வேறு எங்கும் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1.50 கோடி ரூபாய் அளவுக்கு விநியோகஸ்தர்களிடமிருந்து இப்படத்திற்கு வசூலிக்கப்பட்ட தொகையில் முதல் வார முடிவில் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் தரப்பினர்.

பிற நான்கு படங்ளும் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *