wபெண்களின் திருமண வயது உயர்வுக்கு எதிர்ப்பு!

politics

திருமண வயது வரம்பை அரசுகளோ, நீதிமன்றங்களோ தீர்மானிக்கக் கூடாது, பெண் பிள்ளைகளைப் பெற்ற அந்தந்த குடும்பங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என இந்தியத் தேசிய லீக் கட்சி தெரிவித்துள்ளது.

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே, இம்மசோதா நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்தியத் தேசிய லீக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்தியத் தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுகளின் இந்த செயல் இஸ்லாமிய மரபுக்கும் இந்தியக் கலாச்சாரத்திற்கும் எதிரானது என்பதை அரசுகளும் நீதிமன்றங்களும் உணர வேண்டும்.

பருவம் அடைந்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது. அரசாங்கம் இதுபோன்ற சட்டங்கள் கொண்டு வந்தால் அது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிராக அமையும்.

அரசுகளோ நீதிமன்றங்களோ வயது வரம்பைத் தீர்மானிக்கக் கூடாது.அது 18 வயதோ , 21 வயதோ அல்லது அதற்கு மேற்பட்ட வயதோ அந்தந்த குடும்ப பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முடிவில் அரசாங்கமும் நீதிமன்றமும் வயது வரம்பு நிர்ணயம் செய்து குடும்ப விஷயத்தில் தலையிடுவது சரியானது இல்லை.

வயதான தாய் தந்தை இறக்கும் தருவாயில் தங்கள் கண் முன்னே பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் தங்களுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளுக்கு யார் திருமணம் செய்து வைப்பார்கள் என எண்ணும் குடும்பங்கள் நிறைய உள்ளன என்பதை அரசுகள் உணர வேண்டும்

மத்திய அரசு கொண்டு வர உள்ள வயது சம்மந்தப்பட்ட விஷயத்தில் அது 18 வயதோ 21 வயதோ எனத் தீர்மானிக்கக் கூடிய அவசரச் சட்டங்கள் தேவையற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி.அப்துல் வஹாப், இசுலாமியத் தனிநபர் சட்டத்தை மீறும் நோக்கில் அரசின் இந்த அறிவிப்பு உள்ளதால் மாநிலங்களவையில், அனைத்து விவகாரத்தையும் ஒத்திவைத்துவிட்டு இன்று இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *