முழு ஊரடங்கு: தேர்வுகளுக்கு செல்ல தடை இல்லை!

politics

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று போட்டி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு செல்வோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 500ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது 5000த்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன் ஒருபகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. அன்றைய நாளில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள்,மருந்தகங்கள்,பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான போட்டித் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமையன்றுதான் நடைபெறும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத்தேர்வில் தேர்சி பெற்றவர்களுக்கு வரும் 7,8,9,16,17 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு போடப்பட்டிருப்பதால் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த தேர்வர்களிடையே சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமையன்று யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கலந்துக் கொள்ள செல்லும் தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் தங்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டை வைத்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்விற்கு செல்பவர்கள் நிறுவனங்களின் அழைப்புக் கடிதத்தை காண்பித்து செல்லலாம்.

போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு சென்றுவரும் தேர்வர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *