சூரிய கிரகணம்!
இந்தியாவில் இன்று (அக்டோபர் 25) மாலை 4.29 மணி முதல் 5.42 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி துவக்கம்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் துவங்குகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 157-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக கோப்பை போட்டி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பதி நடை அடைப்பு!
இன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
ராம் சேது திரைப்படம் வெளியீடு!
அபிஷேக் சர்மா இயக்கத்தில், அக்ஷய் குமார் நடித்த ராம் சேது திரைப்படம் இன்று வெளியாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 198 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 2,939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்… வெற்றி பெற்றது எப்படி?
மல்லுக்கட்டிய என்.ஐ.ஏ அதிகாரிகள்… விட்டுக்கொடுக்காத சைலேந்திர பாபு!