தீபாவளி மறுநாள் விடுமுறை: தமிழக அரசு!

Published On:

| By Kavi

பள்ளி,கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தீபாவளி மறுநாள் விடுமுறை என தமிழக அரசு இன்று (அக்டோபர் 23) அறிவித்துள்ளது.

நாளை (அக்டோபர் 24) தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே சனி ஞாயிறு மற்றும் தீபாவளி பண்டிகை என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூரில் வசித்து வந்தவர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.

சென்னையிலிருந்து மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளதாகப் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தீபாவளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து விரைவில் முடிவு எடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் பொருட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் அக்டோபர் 25ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும்,

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரியா

சென்னையில் இளம் பத்திரிகையாளர் பரிதாப பலி!

மழைநீர் கால்வாயில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share