இலங்கை பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

அரசியல்

இலங்கையின் புதிய பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்தது. கடந்த 9ஆம் தேதி அதிபர் மாளிகைக்குள் பொதுமக்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச் சென்றார்.

இதனை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அதிபராக இருந்த அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன இன்று (ஜூலை 22) பதவி ஏற்றார். கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

73 வயதான தினேஷ் குணவர்தன கடந்த 1983ம் ஆண்டு முதல்முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 10 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள தினேஷ் குணவர்த்தன இதுவரை 8 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சீனிவாசன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *