மின்சார வாரியம் ஊழலில் சிக்கித் தவிக்கிறது: அண்ணாமலை

Published On:

| By Jegadeesh

மின்கட்டண உயர்வை கண்டித்து பாஜக தலைவர் கே. அண்ணாமலை இன்று ( ஜூலை 18 ) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ( ஜூலை 18 ) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து மின்கட்டண உயர்வை அறிவித்தார்.

அப்போது, “ஒன்றிய அரசின் தொடர் அறிவுறுத்தல்களால், ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் மானியம் பெற, இந்த நேரத்தில் தமிழக மக்களை பாதிக்காத வண்ணத்தில், மின் கட்டணத்தில் திருத்தம் செய்வது கட்டாயமாகிறது” என்று கூறினார்.

இந்நிலையில், இந்த மின்கட்டண  உயர்வை கண்டித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், “பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து தரப்பு மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?” என்று கேட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel