மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: 19ல் விசாரணை!

ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: 19ல் விசாரணை!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கு விசாரணையை 19ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புப் பணிகளை, அமைச்சர் வேலுமணி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஊழல் குற்றச்சாட்டை குறிப்பிட்டும், உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணிக்கு எதிராகவும், திமுக தலைவர் மு .க ஸ்டாலின், மக்களவைத் தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்பிரமணியம் முன்பு இன்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்

அப்போது ஏற்கனவே இதே போன்று அமைச்சர் வேலுமணி தொடர்ந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி அதே போன்ற மனு தான் இதுவும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon