2024-ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா

2024-ம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை கனடா நாட்டின் பொருளாதார நிபுணர் ஜான் எஃப். ஹெல்லிவெல், ரிச்சர்டு லேயார்ட், ஜெஃப்ரி சாக்ஸ், ஜான் இம்மானுவேல் டி நெவ், லாரா பி.அக்னின் மற்றும் ஷுன் வாங் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

தனிநபரின் மொத்த சராசரி ஆண்டு வருமானம், வாழ்க்கையில் உண்டாகும் திருப்தி, சமூக ஆதரவு, ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழலின் அளவுகள் ஆகியவற்றை மதிப்பிட்டு நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் 2024-ம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை ஐஸ்லாந்தும் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நான்கு முதல் பத்து வரையிலான இடங்களில் அணிவகுக்கின்றன.

இந்த அறிக்கையின்படி, இந்தியா தற்போது 126-வது இடத்தில் உள்ளது. இது உலகின் மிகக் குறைந்த மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளம், வங்கதேசம் மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளை விட மகிழ்ச்சி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை குறைவாக உள்ளது.

இந்த மகிழ்ச்சியின் அளவு வீழ்ச்சியானது இந்தியாவில் அதிகரித்து வரும் மனநல நெருக்கடியுடன் நெருக்கமாக தொடர்புடையது என்றும் கோவிட்-19 தொற்று நோயால் முன்வைக்கப்படும் சவால்களால் மோசமடைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

ஹெல்த் டிப்ஸ்: ஏழே நாள்களில் 10 கிலோ எடையைக் குறைக்க முடியுமா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பூண்டு ஊறுகாய்

டிஜிட்டல் திண்ணை: எம் பி சீட் அதிருப்தி… திமுக மாவட்டச் செயலாளர் ராஜினாமா?

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *