ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு பழைய சாதத்தை சாப்பிட்டதெல்லாம் பொற்காலம் என்று சொல்பவர்கள் இன்றைக்கும் உள்ளனர்.
அந்த சுவையை உணர்ந்தவர்கள் இன்று பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஊறுகாய் வகைகளையே ருசிக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களை மட்டுமல்ல… வீட்டில் உள்ள அனைவரையும் திருப்திப்படுத்த இந்த பூண்டு ஊறுகாய் உதவும்.
என்ன தேவை
தோலுரித்த பூண்டு – 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)
எலுமிச்சைப்பழம் – 6 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்)
மல்லி (தனியா), வெந்தயம், சீரகம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 25
கடுகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது
வெறும் வாணலியில் தனியா, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிதளவு வதங்கியதும் அரைத்த பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவிடவும். பூண்டு முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும்.
குறிப்பு: அவரவர் விருப்பத்துக்கேற்ப மிளகாயைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மாகாளிக்கிழங்கு ஊறுகாய்!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… ஏர் ஃப்ரையர் சமையல் – நல்லதா? கெட்டதா?