புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தனித்துவமான பாடத்திட்டம் ஏதும் இன்றி தமிழக அரசின் பாடத் திட்டத்தையே புதுச்சேரி அரசு பின்பற்றி வந்தது.
அங்கு 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழக அரசின் தேர்வு கட்டுப்பாடு அலுவலரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் மத்திய கல்வி வாரியத்தின் அனுமதி பெற்று அனைத்து புதுச்சேரி பள்ளிகளிலும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் கொண்டுவரப்பட்டது.
கேரளா மாநிலத்தின் மலையாள பாடத்திட்டத்தினை பின்பற்றி வந்த புதுச்சேரியின் ஒரு பகுதியான மாஹே பகுதியிலும் இது அமலுக்கு வந்தது .
அதே போல் ஆந்திரா மாநிலத்தின் பாடத்திட்டத்தினை பின்பற்றி வந்த புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாமும் சிபிஎஸ்சி பாடத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால் மலையாளமும், தெலுங்கும் விருப்ப மொழி பாடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் அறிமுகமானதை அடுத்து இன்று முதல் புதுச்சேரியில் பள்ளிகளில் சிபிஎஸ்சி புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அரசியல் கட்சிகள் மீது கெடுபிடி கூடாது” : ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!