ஆந்திர கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே பாபட்லாவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.
மழைநீரை அகற்றும் பணியிலும் மீட்பு பணிகளிலும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 5) ஆந்திராவில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மிக்ஜாம் தீவிர புயலாக இன்று மாலை 3.30 மணியளவில் தெற்கு ஆந்திர கடற்பகுதியில் பாபட்லாவிற்கு தெற்கே கரையை கடந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது என்றும், தற்போது இந்த புயலானது வட திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!
எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்… ஆனால் மீண்டும் உள்ளே வர முடியுமா?