மோர்பி பாலம் விபத்து: அனைவரும் மீட்கப்பட்டதாக அறிவிப்பு!

இந்தியா

குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் விபத்து மீட்பு பணிகள் நிறைவு பெற்று அனைவரும் கண்டெடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு நதி மீது இருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 140 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு படு காயங்களுடன் மோர்பி சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை கடந்த 1 ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 500 பேர் வரை பாலத்தின் மீது இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மச்சு ஆற்றில் தொடர்ந்து ராணுவத்தினர், விமானப்படையினர், கப்பற்படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து ஆற்றில் விழுந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஒருவரை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மீண்டும் மச்சு நதியில் தேடுதல் பணி தொடர்ந்தது.

இந்தநிலையில், அந்த தகவல் போலியானது என தெரியவந்துள்ளது. இதனால், அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாகவும் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாகவும் மோர்பி மாவட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

கலை.ரா

டெலிகிராமுக்கு போட்டி: வாட்ஸ்அப் செய்த புதிய மாற்றம்!

கனியாமூர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *