காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணை!

இந்தியா

காங்கிரஸ் கட்சியின் புதிய  தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் அட்டவணையை வெளியிட்டது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு.

சோனியாகாந்தி இடைக்கால தலைவராக உள்ள  காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்த அந்த கட்சி முடிவு செய்தது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் அட்டவணையை தேர்தல் குழுவின் தலைவர் மதுசுதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

Election of Congress President

● தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்புமனுக்களை  செப் 24ம் தேதி  அதாவது நாளை மறுநாள் முதல் 30ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்யலாம்.

● வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ம் தேதி நடைபெறும்.

● தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியல் அக்டோபர் 1ம் தேதி மாலை வெளியிடப்படும்.

● அக்டோபர் 8ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

● இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

● அக்டோபர் 17ம் தேதி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

● அக்டோபர் 19ம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

● வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன் அன்றைய தினமே தேர்தல் குழுவின் தலைவர் மதுசுதன் மிஸ்திரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இவ்வாறு அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட தேர்தல் குழு வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலை.ரா

ஸ்டாலின் குடும்பம்: அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஃபைல்!

‘வாரிசு’ சாதனையை முறியடித்த ’துணிவு’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *