வெற்றி மாறனின் ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர்!

entertainment

வெற்றி மாறன் படமென்றாலே அறிவிப்பு வந்த முதல் நாளிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிடும். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என வெற்றி மாறனின் ஒவ்வொரு படமுமே க்ளாஸ் ஹிட் ரகம்தான். அந்த வரிசையில் உருவாகிவரும் அடுத்த படம் ‘விடுதலை’.

சூரி ஹீரோவாக நடிக்க, முக்கிய ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் ஊர்காவல் படை காவலராக சூரி நடித்திருக்கிறார். சூரியின் உயரதிகாரியாக இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது. 80களில் வாழ்ந்த வாத்தியார் என்பவரின் கேரக்டரில் நடித்திருக்கிறாராம் சேதுபதி. தமிழ் தேசியம் கட்சியில் முக்கிய நபராக இருந்த வாத்தியார் என்கிற கேரக்டரைச் சுற்றிதான் ஒட்டுமொத்த கதையும் நகருமாம். ஆக, உண்மைச் சம்பவங்களை தழுவி கோக்கப்பட்ட கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த கேரக்டரில் முதலில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் படமாகிவருகிறது. அந்தப் பகுதிகளில் கடும் குளிர் காரணமாக படத்திலிருந்து விலகினார் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவிலேயே, படப்பிடிப்பு முடிய இருக்கிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில் புதிதாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கினார் இளையராஜா. அதில் முதல் இசைக் கோப்புப் பதிவு இந்தப் படத்துக்குத்தான் நடந்துவருகிறது.

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கறார் காட்டாமல் வித்தியாசமான ரோல்களைத் தேடிப் பிடித்து நடித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டிய விஜய் சேதுபதி, இந்தப் படத்திலும் அட்டகாசமாக நடித்திருக்கிறாராம். அடுத்து, கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்திலும் ஒரு முக்கிய ரோல் ஏற்று நடிக்க இருப்பதாகவும் தகவல்.

**- ஆதினி**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *