‘அண்ணே, கிறிஸ்துமஸ் அதுவுமா டீ கூட கேக் எல்லாம் ஃப்ரீயா தர மாட்டீங்களா’ன்னு டீக்கடைல அண்ணா கிட்ட கேட்டேன். ‘ஆமா, கேக்குன்னு கேட்டா மட்டும் ஒரு பயலுக்கும் கேக்க மாட்டேங்குது. நானும் அதையே ஃபாலோ பண்ணலாம்ன்னு இருக்கேன்பா’ன்னு சொன்னாரு. ‘அதை விடுங்கண்ணே, இன்னும் அஞ்சு நாள்ல புது வர்ஷம் வரப்போகுது. புதுசா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க.’ன்னு கேட்டா, ‘ஆமாப்பா சொல்ல மறந்திட்டேன். இந்த பேய், ஆவி கூட எல்லாம் பேசுற வித்தைய கத்துகிட்டு ஒரு சைடு பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் குமாரு’ன்னு ஷாக்க கொடுக்குறாரு. ஏன்ணே, இந்த விபரீத ஆசைன்னு கேட்டா. ‘எப்படியும் எல்லார் கிட்டயும் இந்தியன்னு நிரூபிக்க பழைய டாக்குமென்ட்ஸ் எல்லாம் காட்ட சொல்லுவாங்க. செத்துப்போன தாத்தா, பாட்டியோட பெர்த் சர்டிஃபிகேட்டுக்கு இவங்க எங்க போவாங்க. அதான், அப்டியே வித்தய கத்துகிட்டு ஆவிங்க கிட்ட பேசி இடத்த சொல்லிட்டோம்னா கொஞ்சம் வியாபாரம் நல்லா போகும். அப்படியே டீக்கடைய மாத்திட்டு ஒரு ஹோட்டல ஆரம்பிக்கலாம்னும் இருக்கேன்’னு சொல்லிட்டு டீய ஆத்துறாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் ‘வே டூ டாக் வித் கோஸ்ட்டு’ன்னு கூகுள்ல தேடிட்டு வர்றேன்.
**கோழியின் கிறுக்கல்**
ஏமாற தயாராக இருப்பவனுக்கு,
எந்த ஏமாற்றமும் இருக்காது!!
**அபிவீரன்**
குடியுரிமை திருத்தச் சட்டம் மோடியின் எண்ணத்தில் உருவானது அல்ல!- மோடி.
வர்ணாசிரம எண்ணத்தில் உருவாக்கப்பட்டது
**அபு கத்திஜா**
எழுத்துப்பிழைகளும் அதிகம் கொண்ட கவிதைப் புத்தகமே வாழ்க்கை… !!!
பிழைகளை திருத்தி வாசிக்கப் பழகினால்
நீயே சிறந்தவன்…!!
**வாழ்வின் விடியல்**
எந்த வேலையும் சுலபமானதல்ல.அதே சமயம் செய்ய முடியாததும் அல்ல.
நம்மால் செய்ய முடியாது என்ற எண்ணமே அந்த வேலையை செய்ய முடியாதபடி மேலும் கடினமாக்குகிறது..
**உள்ளூராட்டக்காரன்**
உள்ளூர் வெங்காயம் 130 ரூவா
எகிப்து வெங்காயம் 160 ரூவாயாம்
சும்மாவா… நல்லதுங்க இதயத்துக்கு நல்லது
**கிப்சன்**
விடுப்பா விடுப்பா
சிம்புனா சூட்டிங் போகாததும்
அன்புமணினா பார்லிமென்ட் போகாததும் சகஜம் தானே
#பைக்_நிப்பாட்டி இரண்டு நிமிடம் போன் #பேச முடியாதா
பெரிய கப்பல் வியாபாரி ???????????? pic.twitter.com/IbqB3vmMee— HBD Kuttymaa ???????? / நல்ல நண்பன் ???? (@N4LLANANBAN) December 25, 2019
**கடைநிலை ஊழியன்**
பிரியாணிய பீஸ் இல்லாம கூட சாப்பிடலாம் போல.. இந்த தயிர் வெங்காயம் இல்லாம சாப்பிடவே முடியல !!
வெங்காய விலை கொடுமைகள்..
**ராக்கிங் கில்லர்**
அமித்ஷா ஜீக்கு ஒரு போன போட்டு இந்த ஜிங்கிள் பெல் குருப்ப ஒரு ஆட்டு ஆட்டுனா தான் சரியாவரும் ஒரு கேக்கு கேட்டா தரமாட்டிங்குரானுங்க
இதான் ஒரிஜினல் #பம்பரம் விளையாட்டு.
இதுக்கு பேரு #லப்பி எடுப்போம் ன்னு சொல்வோம்…
90’s அடிங்கடா ஆர்டிய ???????? pic.twitter.com/ZoKuimXeK8
— அருண்காந்த்????™ (@iamHarunKanth) December 24, 2019
**முகமூடி**
விடுமுறை நாளன்று வெளியே போகலாம் என நினைக்கும்போது தான் சிவபூஜைல கரடி புகுந்த மாறி மழை வருவதெல்லாம் டிசைன்..!!
**ராக்கிங் கில்லர்**
டிக்-டாக்கில் சீமானுக்கு மிரட்டல்:
5 பேர் கைது _செய்தி
ஊராடா இது
பாவம் மனுசன் உயிர கொடுத்து கத்தி கத சொல்லி
மக்கள சிரிக்க வைக்கிறார் அவர போய் மிரட்டி இருக்கானுங்க
குழந்தைகள் மனதில் விதைக்கப்படும் சிறு விதைகள் நிச்சயம் விருட்சங்களாக உருமாறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .சேமிப்புடன் இயற்கையை போற்றும் செயல்களை குழந்தைகளிடம் ஊக்குவிப்பதில் என்றுமே மகிழ்ச்சிதான்.#விவசாயம்காப்போம் pic.twitter.com/W2UF2y4zfH
— Fathima Muhammad (@FathimaFirdaus1) December 25, 2019
**அபிவீரன்**
எல்லாரும் ஸ்கூல் காலேஜ கட்டடிச்சுட்டு நாங்கதான் கெத்துனு கூவிகிட்டு இருக்கும்போது
ஒருத்தர் மட்டும் ராஜ்ஜியசபாவையே கட்டடிச்சிடு கெத்தா வீட்ல டீ போட்டுகிட்டிருந்தார்
**உள்ளூராட்டக்காரன்**
ஜவுளிக்கடையில லேடீஸ் சொல்லி புடவை எடுக்குறதுக்கு ஒரு புது கலர் கிடைச்சிருக்கு
எகிப்து வெங்காய கலர்
ஒரு பெரியமனுஷன் 4 பேர் கையில, காலுல விழுந்து சீட் வாங்கி தந்தா, ஒழுங்கா போகாம டெய்லியும் “கட்” அடிக்கிறான்.
பாருங்க சார், பண்றதயும் பண்ணிட்டு “மாங்கா” மாதிரி முழிக்குறத. pic.twitter.com/1TvZBoybMs
— ஜோக்கர்… ???????? (@ItsJokker) December 25, 2019
**ராக்கிங் கில்லர்**
கிறிஸ்துமஸ்சை கலாய்த்து பல பதிவுகள் வந்தது அதோட மூலகாரணம்
கேக் தரத நண்பர்களையே கலாய்த்து மட்டுமே இருந்தது மதத்தை அல்ல
**முகமூடி**
மேனேஜர் கேட்கும் கேள்விக்கு மணிரத்னம் மாறி ஒரே வரில பதில் சொல்லனும் நினைச்சா,
தெய்வ திருமகள் விக்ரம் மாறி பதில் போய்கிட்டே இருக்கும்..!
**தமிழி**
எடை போடுவதில் தராசை மிஞ்சி விடுகிறார்கள் மனிதர்கள்.
-லாக் ஆஃப்
�,”