lசுழல்: ஐஸ்வர்யாவின் வெப் சீரீஸ் எண்ட்ரி!

Published On:

| By Balaji

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய வெப் சீரீஸ் தொடர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமாவின் கதை சொல்லல் விதத்தில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான கதை சொல்லல் முறைகளைக் கையாண்டு பெயர் பெற்றவர்கள் புஷ்கர்-காயத்ரி ஜோடி. வ, ஓரம் போ ஆகிய படங்களில் தொடங்கிய இவர்களது பரிசோதனை முயற்சி விக்ரம் வேதா திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று அவர்களுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த இடத்தை மேலும் விஸ்தரித்துக் கொள்ளும் முயற்சியாக வெப் சீரீஸ் என்ற களத்துக்குள் இறங்கியிருக்கின்றனர்.

புஷ்கர் காயத்ரி இயக்கும் இந்த வெப் சீரீஸில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். இந்தப்படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா கமிட் ஆனபோது, இனி தெலுங்கு சினிமாவுக்கே சென்றுவிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், உடனடியாக மணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் கமிட் ஆகி அந்தப் படத்தின் அடுத்த வார ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும், இந்த வெப் சீரீஸில் நடிகர் கதிர், பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் புஷ்கர்-காயத்ரியின் வெப் சீரீஸின் மூலம் இந்த உலகத்துக்கு அறிமுகமாகிறார்கள். இந்த வெப் சீரீஸுக்கு ‘சுழல்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.�,strFileNAME::::98.md::::”

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய வெப் சீரீஸ் தொடர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமாவின் கதை சொல்லல் விதத்தில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான கதை சொல்லல் முறைகளைக் கையாண்டு பெயர் பெற்றவர்கள் புஷ்கர்-காயத்ரி ஜோடி. வ, ஓரம் போ ஆகிய படங்களில் தொடங்கிய இவர்களது பரிசோதனை முயற்சி விக்ரம் வேதா திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று அவர்களுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த இடத்தை மேலும் விஸ்தரித்துக் கொள்ளும் முயற்சியாக வெப் சீரீஸ் என்ற களத்துக்குள் இறங்கியிருக்கின்றனர்.

புஷ்கர் காயத்ரி இயக்கும் இந்த வெப் சீரீஸில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லீடிங் கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். இந்தப்படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா கமிட் ஆனபோது, இனி தெலுங்கு சினிமாவுக்கே சென்றுவிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், உடனடியாக மணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் கமிட் ஆகி அந்தப் படத்தின் அடுத்த வார ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும், இந்த வெப் சீரீஸில் நடிகர் கதிர், பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் புஷ்கர்-காயத்ரியின் வெப் சீரீஸின் மூலம் இந்த உலகத்துக்கு அறிமுகமாகிறார்கள். இந்த வெப் சீரீஸுக்கு ‘சுழல்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share