ஆர்ஆர்ஆர் இந்திய சினிமாவின் பெருமை: சிவகார்த்திகேயன்

entertainment

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் ஜனவரி 7 அன்று இந்தியா முழுக்க ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நம் நாட்டுக்கு நிறைய ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கி உள்ளோம். அதை படத்திலும் கொண்டு வந்துள்ளனர். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன். இந்தப் படம் முந்தைய படங்களின் அத்தனை சாதனைகளையும் முறியடிக்க வேண்டும். இந்தப் படம் ஒரு மொழி படம் என்று எண்ண கூடாது. இந்த மொத்த படக்குழுவினரும் ஒட்டுமொத்த இந்தியாவை நம் கண்முன் நிறுத்தியுள்ளனர்.

ஆகவே இதை வடக்கு, தெற்கு எனப் பிரிக்காமல் ஒட்டுமொத்த இந்தியப் படம் என்று பார்க்க வேண்டும். எவ்வளவு நாள்தான் ஆங்கிலப் படங்களை உதாரணம் காட்டி நாம் பேசுவது… நம்ம படத்தை பார்த்தீங்களா என நாம் கேட்க வேண்டாமா? இந்தப் பட அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்திய சினிமாவின் பெருமை என்று தான் பார்க்கிறேன். இப்படி ஒரு படத்தை கொடுத்த ஒட்டுமொத்த ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கும் நன்றி. 2022ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆர்ஆர்ஆர் படம் மட்டுமின்றி அஜித் குமாரின் வலிமை படமும் வெளியாகிறது. அதனால் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். இந்தப் படங்களுக்கு வரும் கூட்டத்தைப் போன்று எனது படத்துக்கும் வரும் என்ற ஒரு நம்பிக்கை கிடைக்கும்” என்றார்.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *