kஆர்.ஆர்.ஆர் நடிகர்கள்: முதல் தேர்வு யார்?

entertainment

ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருக்கு பதிலாக எந்த நடிகர்கள் முதலில் நடிக்க தன்னுடைய தேர்வாக இருந்தது என இயக்குநர் ராஜமௌலி மனம் திறந்துள்ளார்.

தன்னுடைய திரைப்படங்களில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர் ராஜமெளலி ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.ருடன் இணைந்திருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்.

கடந்த 2020ல் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம், கொரோனா சூழல் காரணமாக தள்ளி போய் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.

படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரும் வேளையில் படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரது நடிப்பும் ராஜமெளலியின் பிரம்மாண்ட கதை சொல்லல் விதமும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே படக்குழு இந்தியா முழுவதும் மேற்கொண்ட படத்திற்கான புரோமஷனல் செயல்பாடுகளும் பரவலாக பேசப்பட்டது. அந்த வகையில், ராஜமௌலி தனது சமீபத்திய பேட்டியின் போது, ஆர்.ஆர்.ஆர் படத்தின் கதைக்காக ஜீனியர் என்.டி.ஆர்., ராம் சரண் இல்லை என்றால் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அல்லது சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே நடிக்க பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என பேசி இருக்கிறார்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *