அடிப்படையிலேயே தப்பு நடந்திருக்கு: அப்டேட் குமாரு

entertainment

மோடி ஜி… அடிப்படையிலேயே பெரிய தப்பு நடந்திருக்கு. தமிழ் நாட்டுக்கு நீங்க வந்து கலந்துக்கிட்ட விழாவை நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு பண்ணி இருக்காங்க. எவ்வளவு தைரியம் இருந்தா நேரு ஸ்டேடியத்தில் வச்சி இந்த திட்டங்களை துவக்கி இருப்பாங்க. சொல்லணும்னு தோணுச்சு ஜி… அடுத்த முறை வரப்ப பேரை மாத்திட சொல்லுவீங்க தானே…

**James Stanly**

வாங்குன கடன அடைக்கதான் பெட்ரோல் ரேட்டு கூட்டிருக்கோம்..

கடன் எதுக்கு வாங்குனீங்க..

பெட்ரோல் வாங்கதான்..

**உள்ளூராட்டக்காரன்**

இந்த சமையல் குறிப்பு யூ-டியூப் சேனல்ஸை எல்லாம் தடை பண்ணலாம்

சமையல் கேஸ் அதிகம் செலவாக அவங்களும் ஒரு காரணம்; அது போக கணவன்மார்களும் கொஞ்சம் நிம்மதி அடைவாங்க

**செந்திலின்_கிறுக்கல்கள்**

செஞ்சுரி அடிக்கப் போவதுக்கு ஊரே வருத்தப்படுகிறது என்றால் அது பெட்ரோல் விலை என்று அறிக..!

**PrabuG**

முன்னொரு காலத்துல இந்த பெட்ரோல் பங்குகள்ல வரிசையா பல பேர் நின்னு பெட்ரோல் போட்டதாகவும்..

பெட்ரோல் வாங்குற அளவுக்கு மக்கள் வசதியா வாழ்ந்ததாகவும் ஒரு வரலாறு.

**நாகராஜ சோழன் MA.MLA**

புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு என தகவல். செய்தி

இதற்கு தானே ஆசை பட்டீங்க கிரண் பேடி மேடம்…

**ச ப் பா ணி**

அடுத்து என்ன..

அடுப்பூதும் பெண்ணுக்கு

gas எதுக்கு..அதானே

*”ஜோக்கர்…**

இதன் மூலம் இந்தியா பணக்கார நாடாயிரும்.

எப்பிடி?

ஜி ~ பெட்ரோல், கேஸ் விலையை கூட்டினா அத்தியாவசிய பொருள் எல்லாம் ரேட் கூடிரும்.

வாங்க வக்கில்லதாவன் பூராம் சூசைட் பண்ணி செத்துருவாங்க. அப்புறம் பணக்காரன் மட்டும்தான் இருப்பான். இந்தியா பணக்கார நாடாயிரும். இதை சொன்னா..

**சரவணன். ℳ**

கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் மது அருந்த கூடாது என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகள் தவறானது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

டாஸ்மாக் விற்பனை கொறைஞ்சிடுச்சு போல…

**mohanram.ko**

சின்ன வெங்காயம் டூ பெட்ரோல், டீசல், கேஸ் – நாங்களும் பந்தயத்துக்கு வரலாமா?

**மயக்குநன்**

ஜெயலலிதா தொடங்கி வைத்த, ‘அம்மா அழைப்பு மையம்’ திட்டத்தைத்தான், ‘மக்கள் குறை தீர்க்கும் மையம்’ என்ற பெயரில் தொடங்கி இருக்கிறார் முதல்வர் பழனிசாமி!- மு.க.ஸ்டாலின்.

உங்க புகாரை 1100-க்கு போன் பண்ணி சொல்லுங்க தலைவரே..!

**கோழியின் கிறுக்கல்!!**

இப்ப ஒரு லிட்டர் போட்டு சில்லரை வாங்க கஷ்டப்படனும்னு தானே, ஜி ஒரு லிட்டரை நூறு ரூபாய்க்கு கொண்டு போகிறார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்!?

**லாக் ஆஃப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *