ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆல்யா?

entertainment

’ராஜா ராணி2’ சீரியலில் இருந்து ஆல்யா விலகுவதாகவும் அவருக்கு பதிலாக ரியா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி2’ சீரியலும் ஒன்று. ஏற்கனவே ‘ராஜா ராணி’ சீரியலின் முதல் பாகம் ஹிட்டான நிலையில் இதன் இரண்டாம் பாகம் ஆல்யா மற்றும் சித்தார்த்தை கதாநாயகன், நாயகியாக வைத்து விஜய் டிவி ஆரம்பித்தது.

இந்த சீரியலின் கதை குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் ரசிகர்களிடையே டிஆர்பியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் சந்தியா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா சீரியலுக்குள் நுழையும் போது பிரசவத்தின் போது அதிகரித்த எடையை குறைத்தே உள்ளே வந்ததாகவும் அதற்கான வொர்க்கவுட் வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அது அவரது ரசிகர்களிடையே வைரலானது.

இந்த நிலையில் ஆல்யா இப்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாத இறுதியில் அவர் குழந்தையை எதிர்ப்பார்ப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஒன்பது மாத நிறை மாத கர்ப்பிணியாக அவர் இப்போது வரையிலும் ‘ராஜா ராணி2’ சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தான் இருக்கிறார் . பிரசவத்திற்கு பிறகு ஆல்யா கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சீரியல் ஷூட்டுக்கு பிரேக் விட இருக்கிறார்.

இது முன்பே எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் கதையில் அதற்கேற்றாற் போல மாற்றங்கள் அமைப்பதுதான் விஜய் டிவியின் வழக்கம். ஆனால், இப்போது ஆல்யா திரும்பி வரும் மூன்று மாதங்கள் வரையிலும் அவருக்கு பதிலாக ரியா என்ற மாடலை சந்தியா கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்தவரான ரியா இந்த சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அடுத்த மாதம் முதல் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *