மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

எனக்கு கொரோனா வந்தது நல்லதுதான்: பிக்பாஸ் பாவ்னி!

எனக்கு கொரோனா வந்தது நல்லதுதான்: பிக்பாஸ் பாவ்னி!

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் தமிழின் ஐந்தாவது சீசனில் இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்வானார் பாவ்னி ரெட்டி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே தனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருபதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக கூறினார்.

பாவ்னி விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாவ்னி தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அதில் அவர் பேசியதாவது, " பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே எனக்கு கோவிட் தொற்று. நிறைய பேர் எப்படி இருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டு கொண்டிருந்தீர்கள். நன்றாகவே இருக்கிறேன். லேசான தலைவலி மற்றும் உடல் சோர்வு இருந்தது. அதுவும் தற்போது பரவாயில்லை. பிக்பாஸ்சில் இருந்து வந்த பிறகு கோவிட் எனக்கு வந்தது நல்லதுதான். அதனால்தான் வெளியே அங்கும் இங்கும் அலையாமல் வீட்டில் ஒரு வாரம் ஓய்வு கிடைத்திருக்கிறது.

இந்த மாத இறுதியில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெறும். அதற்குள் சரியாகி விடுவேன். பிக்பாஸ் வீட்டில் குறைந்த ஆட்கள் இருந்ததால் சண்டை இருந்தது. அது எங்களுக்குள் சரியாகி விடும். ஆனால் வெளியே வந்தால்தான் தெரிகிறது எங்களது சண்டை எல்லாம் எவ்வளவு பெரியதாக எல்லாரும் பார்த்திருக்கிறார்கள் என்று" என்றார்.

அவரிடம் அமீர் குறித்தும் கேள்விகள் ரசிகர்கள் கேட்டனர், "அமீர் எப்போதும் எனக்கு நல்ல நண்பன். அவன் உள்ளே வந்ததும் தான் என் விளையாட்டை சிரித்து கொண்டே மகிழ்ச்சியாக விளையாடினேன். என் நண்பர்கள் வெளியே போன போதுதான் அமீர் உள்ளே வந்தான். மற்றபடி வேறு எதுவும் இல்லை" என்று தெரிவித்தார் பாவ்னி.

ஆதிரா

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வெள்ளி 21 ஜன 2022