விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மைக்கேல்’

Published On:

| By Balaji

‘புரியாத புதிர்’, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்’.

இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன்சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார். இந்த நிறுவனம் தற்போது இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share