jமழையால் தடைப்பட்ட பீஸ்ட் படப்பிடிப்பு!

entertainment

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, பல்வேறு சேவைகளும் முடங்கியது. அந்த வரிசையில் மழை காரணமாக விஜய் நடிக்கும் பீஸ்ட் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டாவது முறையாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் புரூக்கி, நடிகை அபர்ணா தாஸ்உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. மூன்றாம் கட்டமாக டில்லியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.இதையடுத்து நான்காம் கட்டமாக சென்னை பெருங்குடியில் உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் நடுவே மழை பெய்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்ததது. படப்பிடிப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வெள்ளம் வடிந்த பின்னரே படப்பிடிப்பு நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *