நடிகர் விஜய்யின் தளபதி 68 படம் Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தனது 25வது படமாகஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவின் பாய்ஸ் கேங்கும் இந்த படத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்ததாக தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது.
நேற்று (ஏப்ரல் 8) இயக்குநர் வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளருடன் நகைச்சுவையான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்தார்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 9) GOAT படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய்யின் வீடியோ ஒரு வெளியாகி இருக்கிறது.
அந்த வீடியோவில் விஜய் செம்ம ஜாலியாக ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரை ஓட்டி செல்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#ThalapathyVijay from Russia at the shooting spot of #TheGreastestOfAllTime 😍@actorvijay 🫠♥️pic.twitter.com/tATnvw1OtG
— OTVF™ (@otvfofficial) April 9, 2024
ரஷ்யாவில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய்யின் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்திற்கான காட்சிகள் படமாக்க படுவதாக கூறப்படுகிறது.
வரும் மே மாதம் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
கிளி சோதிடர்கள் இருவரும் விடுவிப்பு!
பொள்ளாச்சி கோழிப்பண்ணை நிறுவனத்தில் ரெய்டு : பின்னணி என்ன?