காதலில் சொதப்புவது எப்படி? தமிழ்ப்படம், காவியத் தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா போன்ற பல வெற்றி படங்களை தனது ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்தவர் சசிகாந்த். இவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஒய் நாட் ஸ்டுடியோஸ். தற்போது இவர் ‘டெஸ்ட்’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சக்தி ஶ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாராவின் காட்சிகளுக்கான அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக சஷிகாந்த் தெரிவித்தார்.
https://twitter.com/saloon_kada/status/1752660183224885578
அதனை தொடர்ந்து, இன்று (ஜனவரி 31) டெஸ்ட் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு டெஸ்ட் படத்தின் ஒரு மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
அண்ணாமலை யாத்திரை : பாஜக கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்!