GOAT படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதாக தெரிகிறது. தொழில்நுட்ப ரீதியிலான காட்சிகளுக்காக படக்குழு விரைவில் ரஷ்யா செல்லவிருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதியும், டீசர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியும் வெளியாகின்றன.
விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் ‘GOAT’ படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். நான்காவது ஹீரோயினாக திரிஷாவும் இணைந்துள்ளார். படத்தில் அவர் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளதாக தெரிகிறது.
இதில் விஜயின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் வில்லன் கலந்த கதாபாத்திரத்தில் மோகனும் நடித்து வருகின்றனர்.
மறைந்த கேப்டன் விஜயகாந்தும் ஒருசில காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வருகிறார். இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ஒரு விஜய் வில்லனாக வருகிறார்.
பிரண்ட்ஷிப், காதல், சோகம் என மொத்தம் படத்தில் 4 பாடல்கள் உள்ளன. இதில் விஜய் ஒரு பாடலையும், இசைஞானி இளையராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளனர். கங்கை அமரன், அறிவு ஆகியோர் படத்தின் பாடல்களை எழுதி இருக்கின்றனர்.
இந்தநிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி சன் டிவி GOAT படத்தின் சாட்டிலைட் உரிமையினை ரூபாய் 5௦ கோடி கொடுத்து கைப்பற்றி இருக்கிறதாம்.
இப்படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூபாய் 2௦௦ கோடியினை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. விஜயே வில்லன் வேடத்திலும் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தோல்வி பயத்தில் சர்வாதிகாரத்தை மோடி கட்டவிழ்த்துள்ளார்” : ஸ்டாலின்
Thalapathy 69 : அரசியல் கதைக்காக ‘அஜித்’ இயக்குநருடன் கூட்டணி வைக்கும் விஜய்?
”தேர்தலில் மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய முயல்கிறார்” : ராகுல்காந்தி குற்றச்சாட்டு!