பிக் பாஸ் சீசன் 7: களமிறங்கும் ஐந்து வைல்டு கார்ட்டு என்ட்ரி!
புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பூர்ணிமாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில் இருந்து தொடங்கியது இன்றைய எபிசோட். அதாவது, வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஏற்ற வேறொரு தொழிலை பூர்ணிமா சொல்ல வேண்டும். அதில், மணிக்கு ‘ஜிங் ஜக்’ அடிக்கும் தொழில், ஐஷூவிற்கு ‘கட்டிப் பிடி வைத்தியம்’ தொழில் என தன் வாய்க்கு வந்த படி தொழில்களை சொன்னார் பூர்ணிமா. அதில் வாய்க்கு வந்ததற்கு ஏற்ப என்பதை விட வன்மத்திற்கு வந்ததுகேற்ப என சொல்வதே சரி.
ஏனெனில், பூர்ணிமா – மாயா விற்கும் மணி – ரவீனாவிற்கும் இடையேயான பஞ்சாயத்து அனைவரும் அறிந்ததே. அதற்கு பிறகு இந்த பிக் பாஸ் சீசனின் முதல் ஒப்பன் நாமினேஷன் நடந்தேறியது. அதில், பிக் பாஸ் வீட்டார் அனைவரும் கூட்டு சேர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டார் அனைவரையும் நாமினேட் செய்தனர். அதாவது பிக் பாஸ் – ஸ்மால் பாஸ் என இரண்டு வீட்டையும் சேர்த்து நாமினேட் ஆகாமல் இருப்பது ஐஷூ, விசித்ரா, ரவீனா மட்டுமே.
ஏற்கனவே இம்முறை ஐந்து வைல்டு கார்ட் என்ட்ரி இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் இரண்டிலிருந்து மூன்று நாமினேஷன் வரை கூட இருக்கலாம். இந்த நாமினேஷனில் விஷ்ணுவிற்கும் பிரதீப்பிற்கும் முட்டிக்கொண்டது. வாராவாரம் பிரதீப்போடு ஒருவர் சண்டை போடுவது, பின்னர் வெளியேறுவது வழக்கமாகி வருகிறது.
ஆனால், வழக்கம் போல் இம்முறையும் விஷ்ணுவின் பேச்சுக்கு எதுவும் ரியாக்ட் செய்யாமல், தனது வழக்கமான ஹெய்னா சிரிப்பை மட்டும் போட்டு விட்டு கடந்து சென்றார் பிரதீப். அவரைப் பொறுத்தவரை இந்த வார டார்கெட் விஷ்ணு தான். அடுத்ததாக நடந்த வார ஷாப்பிங்கில் நான் தான் பண்ணுவேன் என முந்திக்கொண்டு போய், கருவேப்பில்லையே எடுக்காமல் 18,000 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்த விஷ்ணுவால் இந்த வார குக்கிங்கிலும் சலசலப்பு நடக்கலாம்.
இதற்கு இடையில் நீண்ட கால பஞ்சாயத்தாக நீண்டு வரும் ரவீனா vs ஐஷூ வேறு ஒரு பக்கம் நடந்தேறியது. நிக்ஷனும் ஐஷுவும் தனியாக பேசிக் கொண்டிருக்க, இடையில் புகுந்து ரவீனா கலாய்க்க, அது ஐஷூவை மேலும் காண்டாக்கியது. இதற்கு மத்தியில், ‘நீ நிக்ஷனோட எமோஷனலா அட்டாச் ஆகுற. அப்படி ஆகாத’ என லட்சத்து ஒரு தடவையாக ரவீனாவிடம் மணி கூறினார். அடுத்த டாஸ்கை பிக் பாஸ் அறிவிக்க, அதில் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து மணியும் பிக் பாஸ் வீட்டிலிருந்து விஷ்ணுவும் போட்டி போட்டனர்.
அதில் மணி வெல்ல, இரண்டாவது டாஸ்கில் விஷ்ணு வென்றார். இதில், முதல் டாஸ்கில் கேப்டன் பூர்ணிமாவின் தீர்ப்பு மீது ஸ்மால் பாஸ் வீட்டாருக்கு அதிருப்தி நிலவியது. பின் சிறிது நேரத்தில் அவர்களுக்கு தன் நடுநிலையை புரிய வைத்தார் பூர்ணிமா. இந்த சலசலப்பிலும் பிரதீப்பை, ‘உனக்கு விளையாடவே தெரியாது டா’ என பயங்கரமாக கத்தினார் விஷ்ணு. ஸ்மால் பாஸ் வீட்டிற்கு புதியாக சில பொருட்கள் வந்து சேருவதோடு நிறைவடைந்தது இன்றைய எபிசோட்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
விரைவில் சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்!
”இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது”: பயணிகள் அதிர்ச்சி!