அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் டீசர் இன்று (செப்டம்பர் 23) வெளியானது.
நடிகர் அசோக் செல்வன் 2013-ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பிசா 2 வில்லா, தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நித்தம் ஒரு வானம்.

இந்த திரைப்படத்தில், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வியாகோம் 18 ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் டீசரை இன்று இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த டீசரை பார்க்கும்போது, இது முழுக்க முழுக்க காதல் படம் என்பது தெரியவருகிறது.
வீரா, பிரபா,அர்ஜீன் என மூன்று கதாபாத்திரங்களில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.
சுபா கதாபாத்திரத்தில் ரிது வர்மா, மதி கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி, மீனாட்சி கதாபாத்திரத்தில் சிவாத்மிகா ராஜசேகரன் நடிக்கின்றனர்.

முக்கோண காதல் கதையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. டீசரில் பின்னணி இசை மெல்லிசையாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த 96 திரைப்படத்தை போன்று இந்த படம் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தேசிய விருது வாங்கிய அபர்ணா பால முரளி ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செல்வம்
இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
நடிகை பவுலின் வழக்கில் திருப்பம்: முக்கிய ஆதாரம் சிக்கியது!