ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்.. கேம் சேஞ்சர் அப்டேட்..!

சினிமா

தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ராம் சரண். தற்போது இவரது நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்திற்கு கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார்‌.

தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக உள்ள தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம் சரண்  ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “ஜரகண்டி” வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப கோளாறு காரணத்தினால் இந்த பாடல் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “ஜரகண்டி” நாளை ( மார்ச் 27) நடிகர் ராம் சரண் பிறந்த நாளை முன்னிட்டு காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

RC 16, RC 17, கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் என ராம் சரண் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கேம் சேஞ்சர் படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயலலிதாவின் உயிர்போக ஓபிஎஸ் தான் காரணம் – ஆர்.பி.உதயகுமார்

Suriya: வாடிவாசல், வணங்கான் வரிசையில் இணைந்ததா புறநானூறு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *