No Audio Launch Event for Leo

லியோ ஆடியோ லாஞ்ச்: ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி!

சினிமா

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை எனத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

No Audio Launch Event for Leo Movie

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.

இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சம்பந்தமாக கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு தகவல்கள் இணைய தளங்களில் வெளியானது. கோவை, மதுரை, மலேசியா என பல்வேறு ஆருடங்கள் கூறப்பட்டு வந்தது.

இவை எதற்கும் தயாரிப்பு தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இசை வெளியீட்டு விழாவை நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் தான் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்தில் தெரிவித்தார்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அரங்க வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையில் செப்டம்பர் 23 அன்று யூடியூப்பரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

ஆளுங்கட்சி நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு லியோ படத்தை தராததால் இந்த நெருக்கடி என சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு உடனடியாக தயாரிப்பாளர் லலித்குமார் தரப்பில் அப்படி எல்லாம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

இது குறித்து செவன் ஸ்கிரீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டு கோரிக்கைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

எனினும் ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடிக்கடி அப்டேட் வெளியிடுவோம்” என7 ஸ்கீரீன் நிறுவனத்தின் X பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பின் குறிப்பு என குறிப்பிட்டு ஆடியோ வெளியீடு நடத்தாது பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள இந்த பதிவு பல்வேறு யூகங்களையும் சந்தேகங்களையும் அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் எழுப்பியுள்ளது.

இராமானுஜம்

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை வழங்கிய அமெரிக்கா

‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம்!

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *