சாந்தனு பாக்யராஜ் 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தந்தை இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னர் என பெருமைக்குரிய இயக்குநராக பாராட்டப்பட்டு வந்தாலும் அவரது மகனான சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த எந்த தமிழ்படமும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் நேற்றைய தினம்(25.1.2023) வெளியான ப்ளூஸ்டார் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார்.நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கியுள்ளப்ளூஸ்டார் திரைப்பட ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் எதிரொலியாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் உருக்கமான பதிவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மிகவும் உணர்வூப்பூர்வமாக உள்ளது. வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிடுவதற்கு எனக்கு 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என 5,600 நாட்கள் ஆகியுள்ளன.
இது உங்களால் தான். உங்களின் தொடர் ஆதரவு தான் என்னை இத்தனை ஆண்டுகளாக துவளவிடாமல் ஓடவைத்துள்ளது. இதற்காக நான் நன்றிகடன் பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன், யோகி பாபு நடித்துள்ள தூக்குத் துரை ஆகிய படங்களும் வெளியானது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சிங்கப்பூர் சலூன்- ப்ளுஸ்டார் படங்களுக்கு இடையில் தான் போட்டி நிலவி வருகிறது. முதல் இடத்தில் சிங்கப்பூர் சலூன், இரண்டாம் இடத்தில் ப்ளுஸ்டார் படம் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
டிஜிட்டல் திண்ணை: ஆளுநர் தேனீர் விருந்து : அமைச்சர்கள் போனது ஏன்? ஸ்டாலின் திடீர் மூவ்!
சாமியாரான தமன்னா: வைரலாகும் புகைப்படங்கள்!