டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் இயக்குநர் இளனின் இரண்டாவது படமாக உருவாகும் ஸ்டார் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் கவினின் ஜோடியாக அதிதி எஸ் போஹன்ஹர் நடித்துள்ளார். இவர்கள் இருவருடன் இணைந்து லால், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதோடு டாடா வெற்றியால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி மே மாதம் 1௦ அல்லது 17 இந்த இரண்டில் ஒரு தேதியில் படத்தினை வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம்.
விரைவில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ ஆகும் கனவில் இருக்கும் கவின் அதில் சாதித்தாரா? இல்லையா? என்பதை சொல்வதே இப்படத்தின் கதையாம்.
கவின் அடுத்ததாக கிஸ் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அறிமுக இயக்குநர் அசோக் விகர்ணனின் நடிப்பில் கவின் நடிக்கவுள்ளார்.
கேங்ஸ்டர் கதைக்களத்தினை மையமாகக் கொண்ட இப்படத்தில் கவினிற்கு வில்லியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்ந்தெடுத்து படங்களை ஒப்புக்கொள்வதால் கவினின் படங்களுக்கு என ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கார்த்தி மறக்க மாட்டான்…” : தந்தை ப. சிதம்பரம் கைது குறித்து கார்த்தி சிதம்பரம் பேட்டி!
”எனக்கும் ரூ.4 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” : நயினார் நாகேந்திரன்
இந்த 4 டீமும் ‘என்னோட’ பேவரைட்… பிரபல நடிகரால் ‘ஷாக்கான’ ரசிகர்கள்!