நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
வழக்கம்போல பெங்களூரு, டெல்லி அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. வழக்கத்திற்கு மாறாக மும்பையும் இந்த லிஸ்டில் சேர்ந்து அடிவாங்கி வருகிறது.
குஜராத், ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் செல்ல கடுமையாக போராடி வருகின்றன. இந்தநிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தன்னுடைய பேவரைட் அணிகள் எதுவென, வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த போட்டியில், ” மும்பை, பஞ்சாப், டெல்லி, பெங்களூரு ஆகிய நான்கு அணிகளும் எனக்கு மிகவும் பிடித்த அணிகள், ” என்றார்.
Akshay Kumar picking Punjab Kings, RCB, DC and Mumbai Indians as his Top 4. (Star Sports). pic.twitter.com/Zr1DRTHyjL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 7, 2024
தற்போது அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ‘உண்மையிலேயே நீங்கள் ஐபிஎல் பார்க்கிறீர்களா?, ஐபிஎல் குறித்து எதுவும் தெரியாமல் இப்படி பதில் அளித்து இருக்கிறீர்கள்’ என பயங்கரமாக கிண்டல் அடித்து வருகின்றனர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோடை விடுமுறை : கூடுதல் ஏசி பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்!