ஜெயிலர் 2 : ரஜினிக்காக காத்திருக்கும் நெல்சன்
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 ஆகிய படங்களை கமிட் செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த இரண்டு படங்களின் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தப் படம் ஜெயிலர் 2 ஆக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸில் ரஜினியின் மகன் கதாபாத்திரம் இறந்து விடுவார். அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும் பேரனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி புது கதை ஒன்றை நெல்சன் உருவாக்கி இருக்கிறாராம். ஒருவேளை ரஜினிக்கு இந்த கதை பிடித்திருந்தால் நிச்சயமாக ஜெயிலர் 2 படம் உருவாகும் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான பாட்ஷா, சந்திரமுகி போன்ற பல படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு அந்தந்த இயக்குனர்கள் முன்வந்த போது இரண்டாம் பாகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் அந்த படங்களை உருவாக்க ரஜினி ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும் இத்தனை ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் ஒரே ஒரு Sequel படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறார், அது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.O என்ற நிலையில் மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 படம் உருவாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ
TNGIM2024 : முதல்நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு!