கடந்த சில நாட்களாக ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை மதுமிதா குடித்து விட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகை மதுமிதா இந்த விபத்து குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், ” ஒரு உண்மையை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் குடித்துவிட்டு கார் ஓட்டி, பெரிய விபத்தை ஏற்படுத்தி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதில் உண்மை கிடையாது. நான் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை. சிறியளவில் விபத்து ஏற்பட்டது உண்மை தான். தற்போது அந்த போலீஸ்காரர் நன்றாக இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன். எனவே இதுபோன்ற போலியான செய்திகள், வீடியோக்களை நம்ப வேண்டாம்”, என கூறியிருக்கிறார். தற்போது அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணியில் அதிமுக இணைகிறதா..? ட்விஸ்ட் வைத்த வைகைச்செல்வன்
தருமபுரம் ஆதினத்துக்கு மிரட்டல்… திமுக நிர்வாகிக்கு தொடர்பா?