நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் “லால் சலாம்” படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் லால் சலாம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்திருக்கிறார். லால் சலாம் படத்தில் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் தான் வரும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தில் இருந்து ரஜினி கதாபாத்திரத்திற்கான ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோ முழுக்க ரஜினியின் மாஸ் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளது.
ரஜினியின் தலைவர் 170 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பதால் லால் சலாம் அப்டேட் வெளியாவதற்கு முன் தலைவர் 170 படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டது. தலைவர் 170 படத்திற்கு “வேட்டையன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வேட்டையன் மற்றும் லால் சலாம் படத்தின் டீசர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா