மணிரத்னம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அதுமட்டுமின்றி இப்படம் வசூலையும் வாரிக் குவித்து, 2022-ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்து இருந்தது.
வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (மார்ச் 29 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இன்றைய ஆடியோ வெளியீட்டிற்கு 35 மாஸ்டர்களை வழங்கிய எனது சவுண்ட் இன்ஜினியர்களுக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். மேலும், ஓய்வின்றி உழைத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முதன்முறையாக பந்துவீச்சில் சதம்: சி.எஸ்.கே.வை பயமுறுத்தும் ரஷீத் கான்!