தனுஷ் வெளியிட்ட ஸ்வேதா மோகனின் “பெண் – The Anthem”!

Published On:

| By Selvam

Dhanush release Swetha Mohan Pen Anthem

பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு புதிய பாடலை அவரே இசையமைத்து, பாடியுள்ளார்.

1995 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘இந்திரா’ படத்தில் “இனி அச்சம் அச்சம் இல்லை” மற்றும் ‘பம்பாய்’ படத்தில் “குச்சி குச்சி ராக்கம்மா” என சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் ஸ்வேதா மோகன்.

பிரபல பின்னணி பாடகியான சுஜாதா மோகன் தான் ஸ்வேதா மோகனின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இதுவரை 650 பாடல்களுக்கு மேல் இவர் பாடியுள்ளார்.

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி திருமதி செல்வம், சுந்தரி போன்ற தமிழ் சீரியல்களின் டைட்டில் பாடல்களையும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தில் ஸ்வேதா மோகன் பாடிய “வா வாத்தி” பாடல் 2கே கிட்ஸ்கள் மத்தியில் பயங்கர ஹிட்டடித்தது.

இந்தநிலையில், மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு, ஸ்வேதா மோகன் “பெண் – The Anthem” என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.

பெண்களின் சிறப்பையும், மகத்துவத்தையும் போற்றும் வகையில் உருவாகி உள்ள இந்த “பெண் – The Anthem” பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ டாக்டர் அருணிமா சின்ஹா (Arunima Sinha) , அஜீதா பேகம் IPS (Ajeetha Begum IPS) , தெளலத் பி கான் (Daulat Bi Khan) , சீதல் கே.பி (Seethal KP) , டிஃப்பனி ப்ரார் (Tiffany Brar), லதா நாயர் (Lata Nair) ஆகிய உண்மையான சாதனை பெண்களும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்வேதா மேனனின் இந்த பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வெகுவேகமாகப் பரவி வருகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்!

முடங்கிய ஃபேஸ்புக்: கலாய்த்த எலான் மஸ்க்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel